யாழ்ப்பாணம், குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் இராஜேந்திரா பகுதியில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டில் கணவன், மனைவி ஆகிய இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம், குருநகர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருநகர் இராஜேந்திரா பகுதியிலுள்ள வீடொன்றினுள் புகுந்த 15 பேர் கொண்ட குழுவினரே வாள்வெட்டை மேற்கொண்டதாக யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிஹேர தெரிவித்துள்ளார்.
மடுத்தின் சகாயராசா (வயது 50) இவரது மனைவியான சகாயராச ரதி (வயது 45) ஆகிய இருவருமே படுகாயமடைந்தவர்களாவர்.
வாள்வெட்டை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படும் 5 பேரை யாழ். பொலிஸார் கைதுசெய்துள்ளனர். ஏனைய 10 பேரும் தலைமறைவான நிலையில் அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் யாழ். பொலிஸ் நிலைய தலைமைப் பொறுப்பதிகாரி சமன் சிஹேர கூறினார்.
வாள்வெட்டுக்கு இலக்கான இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments:
Post a Comment