உடலின் நோயெதிர்ப்புச் சக்தி பருவகால மாற்றத்தின் பொழுது தடிமனும் காய்ச்சலும் வந்துவிடுகின்றது. காலநிலை மாறும் போதெல்லாம், தலையிடி, தடிமன், காய்ச்சல் வந்துகொண்டிருந்தால் உங்கள் உடலின் நோயெதிர்ப்புச் சக்தி போதியதாக இல்லை என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரித்துக்கொள்வதற்கு பல வழிகள் உண்டு. உங்கள் உடலை தற்காத்துக்கொள்ளும் விலைமதிப்பற்ற சொத்து ‘நோயெதிர்ப்புச்சக்தி’ கட்டமைப்பை கூறமுடியும். பற்றீரியாக்கள், பங்கசு, வைரஸ், ஒட்டுண்ணி என்ற நுண்ணங்களின் இடைவிடாத தாக்குதல்களிலிருந்து இது உங்களை பாதிக்கின்றது. இந்த நோயெதிர்ப்புச்சக்திக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் உணவும் வாழ்க்கை முறையும் முதலிடத்தைப்பெறுகின்றது. அடுத்து மனவழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் மனதை ஆறுதல்படுத்திக் கொள்வதும் முக்கியமாகின்றன. செய்யவேண்டியது என்ன? புகை பிடிக்கும் பழக்கம் இருப்பின் அதனை கைவிடவேண்டும். நல்ல நிறமான பழங்கள், காய்கறிகளை அதிகமாக உண்ண ஆரம்பியுங்கள். வேளாவேளைக்கு உண்பதோடு, ஆரோக்கியமான உடல் எடையையும் பேணி வாருங்கள். போதுமான நித்திரை, முறையான உடற்பயிற்சி என்பன உடலுக்கு மிகவும் அவசியம். மனதுக்கு ஆறுதலாகவும் மனவழுத்தங்களை குறைத்தும் பழகிவருவது தேவையானது. உயர்ந்த அளவில் நார்ச்சத்தையும் குறைவான கொழுப்பையும் கொண்ட உணவுகளை உண்டுவருவதும் முக்கியம். முறையான உணவுதான் சிறப்பான மருந்து என்பார்கள். சரியான உணவுப்பழக்கத்திக்குத்தான் முதலிடம் வழங்கப்படுகின்றது. ஆரோக்கியத்தைத் தராத உணவுகளை உண்டுவிட்டு சில விற்றமின் ‘சி’ குளிகைகளை விழுங்கிவிட்டால் ஆரோக்கியம் கிடைத்துவிடும் என எதிர்பார்க்கக் கூடாது. தினமும் நிறை உணவுடன் உணவுக் குறைநிரப்பிகளையும் மூலிகைகளையும் எடுப்பதன் மூலம் உடலின் நோயெதிர்ப்புச்சக்தியை வலுப்படுத்தி நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கக்கூடும். சில முக்கியமான உயிர் சத்துக்களும், மூலிகைகளும் குறைநிரப்பிகளும் கீழே தரப்பட்டுள்ளன. உயிர்ச்சத்துக்களும் கனியுப்புக்களும்: வன் ஏ டே பிளஸ் - இந்த பல்வகை போசாக்குக் கலவை உயிர்ச்;சத்து குளிகையானது ஒரு ஆற்றல் மிக்க நோய் எதிர்ப்பாளியாகும். ‘சிங்’ உம் மக்னீசியமும் காய்ச்சலிலிருந்து பாதுகாப்பு தரவல்லன். உயிர்ச்சத்துக்கள் ‘சி’ உம் ‘ஈ’ உமுள்ளக இரசாயன தாக்கங்களினால் ஏற்படக் கூடிய மனவழுத்தத்தை எதிர்க்க வல்லன். உள்ளக ஒட்சியேற்ற இரசாயனத்தாக்க நிகழ்வானது ஆரோக்கியமான கலங்களை அழித்துவிடக்கூடிய கட்டாக்காலி அணுக்களை பெருந்தொகையில் விடுவித்து விடுகிறது. ஃபோலிக்கமிலம், களை விற்றமின் ‘பி’, என்பன நோய் எதிர்ப்புச்செயற்பாட்டுக்கு எரிபொருள் போன்று செயற்பட்டு சில புற்றுநோய்கள் ஏற்படக்கூடிய அபாயத்ததையும் குறைக்கின்றன. சிங், செலேனியம், இரும்புச்சத்து, கொப்பர், பீராகறடின் என்பவற்றுடன் இணைந்த ஃபோலிக்கமிலம் மற்றும் உயிர்ச்சத்துக்கள் ‘ஏ’, ‘சி’, மற்றும் ‘டி’ என்பன தொற்றுக்காவி எதிர்க்கவல்லன. நோய் எதிர்ப்புக்கான மூலிகைகள்: சில குறிப்பிட்ட போசாக்குப்பொருட்கள் உங்கள் நோய் எதிர்ப்புச்சக்தியை பலப்படுத்துவது போன்றே மூலிகைகளும் சிறப்பாக அதனை செய்கின்றன. மூலிகை: எக்கனேசியா: வைரஸ் நுண்ணுயிர்களை தனக்குள் மூழ்கடிக்கவும் திறம்பட அவற்றை அழித்துவிடவுமான இயலுமையை நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்புக்கு கொடுக்கிறது. மூலிகை: கற்ஸ் குளோ: நோய் எதிர்ப்புச்செயற்பாட்டை தூண்டுவதுடன் எதிர் ஒற்சியேற்றி குணத்தையும் எரிவு நீக்கிக் குணங்களையும் கொண்டது. மூலிகை: அஸ்ராலகஸ்: இது ஒரு ஊட்டச்சத்தி மூலிகை, உடலின் வீரியத்தை அதிகரிக்கச் செய்து நோய் எதிர்ப்புச்சக்தியை முன்னேற்றுவதோடு காய்ச்சல் போன்றவற்றை தடுக்கும் வல்லமையை நோய் எதிர்ப்புக்கட்டமைப்புக்குக் கொடுக்கிறது. மூலிகை: அஸ்வகாந்தா: நோய் எதிர்ப்பு சக்தி கட்டமைப்பைக் கட்டியெழுப்ப உதவும். இது பொதுவாகவே மனிதனின் வீரியத்தையும் ஆற்றலையும் அதிகரிக்கிறது. அஸ்வகாந்தா வேர் வெளிக்காட்டும் நோய் எதிர்ப்பு கட்டமைப்பை ஒழுங்குபடுத்தும் ஆற்றலானது முழு உடலினதும் நோய் எதிர்ப்பு ஆற்றலை பலப்படுத்துகிறது. மூலிகை: எல்டபிளவர்: கொட்டையற்ற பெர்ரீக்களும் பூக்களும் காய்ச்சல், தடிமன் மற்றும் சுவாசத்தொகுதி ஒழுங்கினம் தொடர்புடைய நோய்கள் செவித் தொற்றுக்கள், தொண்டை கரகரப்புக்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதில் அதி தீவிரமாய் செயற்படவல்லன. விட்டமின் ‘பி’ யையும் விற்றமின் ‘ஈ’ யையும் கொண்டிருக்கும் இம்மூலிகை குறிப்பாக காய்ச்சல், தடிமன் நேரங்களில் நோய் எதிர்ப்பினை அதிகரிக்கின்றன. இவையனைத்தையும் கொண்டே எக்கினேசியா பிளஸ் தயாரிக்கப்பட்டுள்ளது. அதிக தண்ணீர் அருந்துதல்: இந்த குளிர்காலத்தில் காற்று உலர் காற்றாக இருப்பதனால் எமது உடலும் கூட அதிகம் காய்ந்து விடுகிறது. நாளொன்றுக்கு 6 முதல் 8 குவளை தண்ணீரை அருந்துவதன் மூலம் உடல் முதலாவது பாதுகாப்பு அரணை இட்டுக்கொள்ளும். எமது கலங்கள் ஈரலிப்படையவும் கழிவகற்றல் சிறப்பாக இடம்பெறவும் தண்ணீர், பற்றிரியா கொல்லிகளைக் கொண்டிராவிட்டாலும் உடல் வரட்சியடைந்து இலகுவாக காய்ச்சல் எட்டுவதை இது தடுக்கும். எனவே எப்போதும் ஒரு தண்ணீர் போத்தலை எடுத்துச்செல்வதும் அருந்துவதும் காய்ச்சல் அற்ற ஒரு குளிர்காலத்தை கொடுக்கும் அல்லவா? உங்கள் குழந்தையின் நோய் எதிர்ப்புச்சக்தியைக் கூட்டுங்கள்: குழந்தைகள் இக்காலத்தில் வழமையைவிட அதிகமாக சுகவீனங்களை அடையக்கூடும் அல்லவா? அவர்களும் நோய் எதிர்ப்பு சக்தியினை முன்னேற்றி பள்ளிக்குத் தவறாது செல்வதற்கு சில எளிய வழிகள் உள்ளன. கீழே குறிப்பிடப்படும் சில குறைநிரப்பிகளில் நீங்கள் சிறார்களுக்கு உதவும் என்று சிலவற்றை தினமும் கொடுத்து அனுப்புங்கள்: 1. எக்கினேசியா - மூலிகைக்கலவை: நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கும் இயற்றை மூலிகை. 2. விற்றமின் ‘சி’: படையெடுக்கும் கிருமிகளுக்கு எதிராகப்போரிடும் எளியதோர் உயிர்ச்சத்து. 6 வயது வரையான சிறு குழந்தைகள் நாளுக்கு 250 மி.கி. வரையில் எடுத்தால் பயன்தரும். பெரியோரும் வளர்ந்த குழந்தைகளும் 500 மி.கி. அளவு தினமும் எடுக்கலாம். பழங்கள் மற்றும் மரக்கறி குறைநிரப்பி: இயற்கையான பழங்கள், காய்கறிகள் காணப்படும் நோய் எதிர்ப்பு குணங்கள் சிறப்பானவை. உங்கள் குழந்தைகள் போதுமான பழங்களையும் மரக்கறிகளையும் உண்ணாவிட்டால் பழச்சாறு அல்லது பழங்களோடு மறக்காது குறை நிரப்பியையும் கொடுக்கலாம். கனியுப்பு – சிங்: இந்த கனியுப்பானது நோய் எதிர்ப்பினை தூண்டுவதற்கு அத்தியாவசியமான பாதுகாப்பானதும் காத்திரமானதுமான வழிமுறையாகும். 6 வயதுக்குட்பட்ட சிறார்கள் நாளொன்றுக்கு 10 தொடக்கம் முதல் 20 மி.கி. அளவு இதனை எடுக்கலாம். பெரிய குழந்தைகளும் வளர்ந்தவர்களும் 20 தொடக்கம் 40 மி.கி. வரை எடுக்கலாம். புறோ பயோரிக்ஸ்: இவை எமது பெருங்குடலில் வாழ்ந்து நோய் எதிர்ப்புக்கு துணைபுரியும் நல்ல பக்ரீரியாக்களைக் கொண்டுள்ளன. லக்டோபசிலஸ் மற்றும் பிபிடோபக்ரீரியா என்பன இவற்றின் சிறந்த இனங்களாகும்.











0 comments:
Post a Comment