
பாலிவுட்டில் உருவாகி திரைக்கு வந்த டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நாயகியாக வித்யா பாலன் நடித்திருந்தார்.இப்படம் முன்னாள் திரையுலக நாயகி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை பற்றிய திரைப்படமாகும்.தன்னுடைய அபார நடிப்பினால் இப்படத்திற்காக நாயகி வித்யா பாலன் தேசிய விருது வாங்கினார்.இந்நிலையில் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை தமிழிலும் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்து வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள்.தற்போது அந்த முடிவில் சிறிது மாற்றம் ஏற்பட்டு, டர்ட்டி பிக்சர்ஸ் படத்தை ரீமேக் செய்ய உள்ளார்கள்.இப்படத்தில் நடிக்க பொருத்தமான நாயகியை தேடிய படக்குழு, அனுஷ்காவை தெரிவு செய்துள்ளது.மேலும் டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடிப்பதற்கு நாயகி அனுஷ்காவே பொருத்தமானவர் என்று கொலிவுட் பிரபலங்கள் கூறியுள்ளார்கள்.











0 comments:
Post a Comment