இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை ஆதரித்து இந்தியா வரலாறு காணாத துரோகத் தனத்தை
செய்துவிட்டது. இதனை இலங்கை ஒருபோதும் மன்னிக்காது. அதேபோன்று இதற்கான விளைவுகளை இந்தியா மிக விரைவில் சந்திக்கும் என்று அமைச்சரும் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்
நல்ல நண்பனை இழந்த இந்தியாவுடன் ஏனைய நாடுகளும் நட்பை வைத்துக் கொள்ள விரும்பாது. இதுவரை காலமும் இந்தியாவுடன் காணப்பட்ட அரசியல், இராஜ தந்திரம் பொருளாதாரம் மற்றும் கலாசாரம் உட்பட சகல துறைகளிலுமான அந்நியோன்ய உறவுமுறைகள் இடை நிறுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா ஜெனீவாவில் முன்வைத்துள்ள பிரேரணையை ஆதரித்து இந்தியா பெரும் தவறிழைத்து விட்டது. இலங்கைக்கு மாத்திரமல்ல ஏனைய வலய நாடுகளுக்கு மாத்திரம் அல்ல ஏனைய வலய நாடுகளுக்கு எதிராகவும் தான் இந்தியா தனது துரோகத்தனத்தை செய்துவிட்டுள்ளது. மேற்குலக நாடுகளின் தலையீடுகளுக்கு தேவையான சூழலை இந்தியா ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இதன் ஆபத்தை இந்தியாவும் விரைவில் உணரும்.
எவ்வாறாயினும் இலங்கை இந்தியாவை பெரிதும் நம்பியிருந்தது. அதேபோன்று ஏனைய நாடுகளை விட இந்தியாவுடனேயே இலங்கை அந்நியோன்னியமான நட்பை பாதுகாத்து வந்தது. இந்த புனிதமான நட்பை இந்தியா தூசித்து விட்டது. இதனை ஒருபோதும் மன்னிக்க முடியாது.
புலிகளை அழித்ததன் பயனை இந்தியாவும் தான் அனுபவிக்கின்றது. இல்லையென்றால் புலிகளின் குழுக்கள் இந்தியாவிலும் ஊடுருவி ராஜீவ் காந்தியைப்போன்று தற்போதைய தலைவர்கள் பலரையும் கொன்றொழித்திருப்பார்கள். ஆனால் கெட்டித்தனமாக நடந்து கொண்டு இந்தியா தனது நண்பனை வெள்ளையர்களுக்குக் காட்டிக் கொடுத்துள்ளது எனக் கூறினார்












0 comments:
Post a Comment