Tuesday, March 20, 2012

மஹிந்த சமரசிங்கவே காரணம் - ஜே.வி.பி

இலங்கை தொடர்பாக இ;ந்திய பிரதமர் நேற்று வெளியிட்ட கருத்து, அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பிழையினால் ஏற்பட்ட ஒன்று என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய, தேசிய தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.டி.லால் காந்த இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் அரசியலில் இன்று வெகுவாக பேசப்படுகின்றது.
இந்தநிலையில், குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால் அது இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒருசாராரும் தாக்கம் ஏற்படாது என்று பிறிதொரு சாராரும் கருத்துரைக்கின்றனர்

0 comments:

Post a Comment