ஐநா மனிதஉரிமைகள் கவுன்சில் விவகாரம் தொடர்பில் அமெரிக்காவைக் கண்டித்து கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்
சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.இலங்கையின் இறுதிக்கட்டப் போரின்போது மனித உரிமை மீறல்கள் எதுவும் திட்டமிட்டு புரியப்படவில்லை என்றும் இலங்கை தொடர்பில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கூறிவருகின்ற தகவல்கள் பொய்யானவை என்றும் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கூறினர்.தாய்மண்ணைப் பாதுகாக்கும் உள்நாட்டு வெளிநாட்டு அமைப்புகளின் ஒன்றியம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த சந்திப்பில் பெளத்த பிக்குமாருடன் சில தேசிய வாத அமைப்புகளும் கலந்துகொண்டன.பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி நாடுகளில் வசிக்கும் இலங்கையரை பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் சிலரும் இங்கு கலந்துகொண்டு பேசினர்.நாட்டின் வடக்கே மன்னாரில் உள்ள எண்ணெய் வளத்தைக் குறிவைத்தே அமெரிக்காவும் நோர்வேயும் இலங்கை மீது மனித உரிமைகள் குற்றச்சாட்டை சுமத்துவதாக அங்குபேசியவர்கள் கூறினார்கள்.இலங்கையில் தமக்கு சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்த அமெரிக்கா முயற்சிப்பதாக அங்கு பேசிய பிக்குகள் அமைப்பைச் சேர்ந்த ஓமாரே கஸ்ஸப்ப தேரர் கூறினார்.இதேவேளை, இங்கு பேசிய லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட அனுர மெதகெதர, ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர் தமிழர் அமைப்புகளின் செயற்பாடுகள் முடங்கிவருகின்றமை தமக்கு வெற்றியளிப்பதாக தெரிவித்தார்.











0 comments:
Post a Comment