பெங்களூர் உதைப்பந்தாட்ட மைதானத்தில் நடந்த மாவட்ட லீக் உதைப்பந்தாட்ட ஆட்டத்தில் மார்ஸ்-தென் மேற்கு ரெயில்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மார்ஸ் அணியில் மாற்றுவீரராக களம் இறங்கி விளையாடிய 27 வயதான வெங்கடேஷ் திடீரென மைதானத்தில் மயங்கி விழுந்தார்.
மைதானத்தில் ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் சக வீரர்கள் அவரை உடனடியாக ஆட்டோவில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர். வைத்தியசாலையில் அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று தெரிவித்தனர். இதனால் அந்த ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
மைதானத்தில் வீரர் மரணம் அடைந்த இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அகில இந்திய கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.

0 comments:
Post a Comment