60 மற்றும் 70களில் தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். காபரே, தெம்மாங்கு, தாலாட்டு, காதல் என அத்தனை விதமான
பாடல்களிலும் தனது திறமையை வெளிகாட்டிய எல்.ஆர். ஈஸ்வரியின் குரலுக்கு இன்றும் தனி ரசிகர் கூட்டமுண்டு.எண்பதுகளுக்குப் பிறகு எல்.ஆர். ஈஸ்வரி சினிமாவில் பாடுவது நின்றுபோனது, பக்திப் பாடல்களைப் பாடி வந்தார். இந்த நிலையில், எல்.ஆர். ஈஸ்வரி மீண்டும் முழுமையான குத்துப் பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.இந்தப் பாடலில் அவருடன் சேர்ந்து பாடியிருப்பவர் சினிமாவின் சிங்கம் எனப்படும் டி.ராஜேந்தர். அவரது மகன் சிலம்பரசன் நடிக்கும் 'ஒஸ்தி' படத்தில் இடம்பெறும் குத்துப்பாடலைத்தான் இந்த இருவரும் இணைந்து பாடுகிறார்கள்.'கலாசலா' என்று ஆரம்பிக்கும் இந்தப் பாட்டுக்கு திரையில் ஆடப் போகிறவர் மல்லிகா ஷெராவத். அவருடன் ஹீரோ சிம்பு, வில்லன் சோனு சூட் ஆகியோரும் குத்தாட்டம் போடுகிறார்கள்.

இந்தப் பாடலுக்கு.இந்தியில் பெரும் வெற்றி பெற்ற 'தபாங்' படத்தின் ரீமேக்தான் இந்த 'ஒஸ்தி'. 'தபாங்'கில் 'முன்னி பத்னம்' என்ற ஐட்டம் பாட்டு செம ஹிட். அந்தப் பாடலுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காக இசையமைப்பாளர் தமன் பார்த்துப் பார்த்து உருவாக்கியுள்ள பாடல்தான் 'கலாசலா..' மல்லிகா ஷெராவத், எல்.ஆர். ஈஸ்வரி, டி. ராஜேந்தர், சிம்பு என ஒரு வித்தியாசமான கூட்டணி இந்தப் பாடலுக்கு அமைந்துவிட்டதால், இப்போதே ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது.











0 comments:
Post a Comment