Saturday, March 10, 2012

சென்னை ஆர்ச்சிட் மருந்து ஆலையில் பெரும் தீவிபத்து

சென்னை அருகே உள்ள ஆர்ச்சிட் மருந்துத் தயாரிப்பு ஆலையில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. சென்னை அருகே சோழிங்கநல்லூரில் ஆர்ச்சிட் மருந்து நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு உள்ளது. இந்த ஆலையில் இன்றுகாலை பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீ கொளுந்து விட்டு எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. விபத்தில் பல லட்சம் மதிப்புள்ள மருந்துப் பொருட்கள், உபகரணங்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஊழியர்கள் யாரும் விபத்தில் சிக்கவில்லை என்று தெரிகிறது.

0 comments:

Post a Comment