Saturday, May 5, 2012

மகன் உருவத்தில் தாய்க்கு வந்த ஜமன்! இன்று காலை நடந்த விபரீதம்...

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மைலம்பாவெளியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.


இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்து சம்பவத்தில் மட்.வின்சட் மகளிர் தேசிய உயர்தர பாடசாலையின் பிரதி அதிபர் தங்கேஸ்வரி நாகரெட்னம் (55வயது) என்பர் உயிரிழந்துள்ளடன் அவரது மகனான நரேந்திரகுமார் (22வயது) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.


இவர்கள் இருவரும் இன்று அதிகாலை மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த போது மகன் நித்திரை தூக்கத்தில் மின்சார தூணில் மோட்டார் சைக்கிளை மோதியுள்ளார்.


இதன்போது பிரதி அதிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

0 comments:

Post a Comment