Wednesday, May 9, 2012

பெங்களுரை சமாளிக்குமா மும்பை....

ஐ.பி.எல் தொடரின் மும்பை இண்டின்ஸ் அணி, பெங்களுர் றொயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து வெற்றியை தக்க வைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐந்தாவது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடரின் 54வது போட்டியில் மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் றொயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதும் இன்றைய போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது.
இரு அணிகளுக்குமே இன்றைய ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது.
அரையிறுதிக்கு முன்னேற அடுத்தடுத்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என்ற நெருக்கடி இரு அணிக்கும் உள்ளது. இந்த சீசனில் இரு அணிகளும் முதல் முறையாக சந்திக்கின்றன.
மும்பை அணி 11 ஆட்டத்தில் 7 வெற்றி, 4 தோல்விகளை பெற்றுள்ளது. கடைசியாக சென்னை அணியை வீழ்த்திய தெம்புடன் களமிறங்குகிறது. சச்சின் பார்மிற்கு திரும்பியிருப்பது வலுசேர்க்கிறது.
அதிரடி நாயகனாக வேய்ன் ஸ்மித் உருவெடுத்துள்ளார். பொல்லார்டு காயத்திலிருந்து குணமடைந்துள்ளதால் இன்று களமிறங்க வாய்ப்புள்ளது. பிராங்கிளின், ரோகித் சர்மா, அம்பாதி ராயுடு ஆகியோரும் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டினால் வலுவான ஸ்கோரை குவிக்கலாம்.
மலிங்காவின் அனல் வேகம், ஓஜாவின் சுழல் நெருக்கடி கொடுக்கும்.
பெங்களூர் அணி 11 ஆட்டத்தில் தலா 5 வெற்றி, 5 தோல்விகளை பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. அணிக்கு கிறிஸ் கெய்ல் வழக்கமாக அதிரடியாக விளையாடி வருகிறார்.
டிவில்லியர்ஸ் எந்த கட்டத்திலும் போட்டியின் முடிவை தன்பக்கம் இழுப்பவராக உள்ளார். டில்ஷானும் துடுப்பாட்டத்திற்கு பலமாக உள்ளார். இந்த மூவர் கூட்டணியே அணியின் வெற்றியை தீர்மானிப்பதாக இருக்கிறது.
இவர்களுடன் வீராட் கோஹ்லி, மயங்க் அகர்வால் ஆகியோர் அசத்தினால் சவால் கொடுக்கலாம். அணியின் பந்துவீச்சு பலவீனமாக உள்ளது.
ஜாகீர்கான், அணித்தலைவர் டேனியல் வெட்டோரி ஆகியோர் எதிர்பார்த்த அளவிற்கு சோபிக்கவில்லை. துடுப்பாட்டத்தை நம்பியே பெங்களூர் அணி இன்றைய ஆட்டத்தை சந்திக்கிறது.

 

0 comments:

Post a Comment