Saturday, May 12, 2012

நயன்தாரா பணத்துடன் சிக்கியதால் நடிகைகள் அதிர்ச்சி: ஆடிட்டர் மூலம் கணக்குகள் ஆய்வு...


40 நிமிடம் நயன்தாராவிடம் விசாரணை நடந்ததாக கூறப்பட்டது. இது சக நடிகைகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கணக்கு வழக்கு இல்லாமல் பணத்தை எடுத்துச் செல்வதை நிறுத்தி வைத்துள்ளனர். அத்துடன் தங்கள் கணக்குகளை ஆடிட்டர் வைத்து ஆய்வு செய்ய துவங்கியுள்ளனர். சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதுகாப்பான முறையில் எப்படி முதலீடு செய்வது என்றும் விசாரித்து அறிகின்றனர்.
நடிகை சினேகா சமீபத்தில் தனது திருமண மண்டபத்தை விற்றார். திருமண செலவுக்காக அதை விற்றதாக கூறப்பட்டது. ஆனால் சினேகா அதை மறுத்தார். வேறு காரணத்துக்காக விற்றேன் என்றார். நமீதா சம்பாத்தியம் முழுவதையும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார். அடுக்குமாடி வீடுகள் கட்டியும் விற்கிறார். கணக்கு விவகாரங்களை ஆடிட்டர் வைத்து கவனித்து கொள்கிறார்.

0 comments:

Post a Comment