Friday, May 4, 2012

உடலுறவு கொள்ள உரிய தினம் ! சில சுவாரஸ்யத் தகவல்கள் …






காதலை சொல்ல, முதல் டேட்டிங்கிற்கு சம்மதம் பெற, காதலர்கள் சந்தித்துக்கொள்ள புதன்கிழமை மகா உசிதமான கிழமை என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள்.இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த சுமார் 8,000 பேர்களில் 40 க்கும் அதிகமான விழுக்காட்டினர் காதல் செய்ய புதன்கிழமைக்கே ஜே…! போட்டுள்ளனர்.
மேலும் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை தங்களது சந்திக்கலாம் அல்லது டேட்டிங்-குறைந்தபட்சம் பீச் அல்லது சினிமாவுக்காவது போகலாம் என்பதை முடிவு செய்துகொள்ள இரண்டு,மூன்று நாட்கள் அவகாசம் இருப்பதால், அநாவசிய மனமுறிவு ஏற்படாது.ஒருவேளை காதலன் அல்லது காதலி யார் மறுப்பு தெரிவித்துவிட்டாலும், உறவினர் அல்லது நண்பர்கள் வீட்டிற்கு செல்வத்யு குறித்தாவது திட்டமிட்டுக்கொள்ள முடியும்.
சம்பள உயர்வும் கேட்கலாம்: இவையெல்லாவற்றையும் விட அலுவலகத்தில் புரமோஷன் அல்லது சம்பள உயர்வு குறித்து மேலதிகாரியிடம் பேச புதன்கிழமைதான் “பெஸ்ட் சாய்ஸ்” என்று அடித்துக்கூறுகின்றனர் ஆய்வாளர்கள்.வாரத்தின் நடுப்பகுதி என்பதால்,மேலதிகாரிகள் அல்லது முதலாளிகள் டென்ஷன் குறைந்து காணப்படுவார்கள் என்பதால், நமது கோரிக்கைக்கு சாதகமாக பலன் கிடைக்கும் என்கிறது லண்டனில் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகள்.

எனவே அன்றைய தினம் அதிகாலையில் கலவியலில் ஈடுபடுவது ஆகச்சிறந்தது என்கிறார்கள். ஆண்களுக்கான (செக்ஸ் ஹார்மோன்) டெஸ்டோஸ்டெரோனும்,பெண்களுக்கான ஆஸ்ட்ரோஜ்னும் மற்ற நாட்களை விட ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும் என்பதால், அன்றைய தினம் அதிகாலை அலாரம் வைத்துக்கூட எழுந்துகொள்ளலாம் என்று கூறி நமுட்டு சிரிப்பு ஒன்றை உதிர்க்கிறார்கள் இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

முடிந்தால் இனிமேல் புகைப்பதில்லை என்று மனதிற்குள் எடுத்துக்கொண்ட சத்தியத்தை அன்றைய தினம் நடைமுறைப்படுத்த தொடங்கலாம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அதே சமயம வெள்ளிக்கிழமை நாம் வார விடுமுறை “மூடு”க்கு வந்துவிடுவோம் என்பதால், சிந்திக்கும் திறன் குறைந்துவிட வாய்ப்புள்ளது.எனவே முக்கிய முடிவுகளை அன்றைய தினம் எடுப்பதை தவிர்க்கலாம் என்றும் அவர்களது அட்வைஸ்!

குழந்தை பெற்றுக்கொள்ள சிறந்த தினம் உங்களது குழந்தை எதிலும் சிறந்தவராக விளங்கவேண்டும் அல்லது வெற்றியாளராக திகழவேண்டும் என்றால் அந்த குழந்தை சனிக்கிழமையன்று பிறந்தால் நிச்சயம் நடக்கும் என்கிறது “Office for National Statistics” மேற்கொண்ட ஆய்வு. அவ்வளவு ஏன் சனிக்கிழமையன்று பிறந்தவர்கள் பிரதமராக ஆவதற்கு கூட வாய்ப்புள்ளதாம்.


0 comments:

Post a Comment