Saturday, May 5, 2012

“இந்து சமுத்திரத்தின் கொலைக்களம்'' கிலிபிடித்து அதிர்ந்து போயுள்ளது இலங்கை படைத்தரப்பும் அரசதரப்பும்?- கலாநிதி சூசை...


வரலாற்றில் கறைபடிந்த அழிக்க முடியாத அவமானம் இது. வன்னிப் பேரவலம் தொடர்பாக ஐ.நா. நிபுணர் வெளியிட்ட அறிக்கையும், சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான இரு ஆவணங்களும் இதற்குத் தக்க சான்றுகள்.
கிளாலிப் பயணிகள் படுகொலை, மண்டைதீவில் குருநகர் மீனவர் படுகொலை, குமுதினிப் படகு கோரக்கொலை, நவாலி தேவாலயப் படுகொலை, நாகர்கோவில் பாடசாலை மாணவர் படுகொலை, செஞ்சோலை சிறுவர் படுகொலை இப்படிப் பல படுகொலைகள் இவையாவும் பொய் “நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை' இலங்கை அறுபது வருடங்களாக சர்வதேச சமூகத்தின் முன் கூறிவருகின்ற பொய்மொழிகள் இவை.
மேற்கு ஐரோப்பாவில் ஹிட்லரின் யூதப்படுகொலை, கிழக்கு ஐரோப்பாவில் பொஸ்னிய முஸ்லிம்களின் படுகொலை, ஆபிரிக்காவில் றுவாண்டா குட்சி இனப்படுகொலை, மேற்கு ஆசியா ஈராக்கில் சதாமின் குர்டிஸ் இனப்படுகொலை. தென்கிழக்காசியாவில் பொல்பெட்டின் கம்பூச்சிய படுகொலை இந்த வரிசையில் இப்போது தென் ஆசியாவின் கொலைக்களத்தில் சிங்களத்தின் தமிழர் படுகொலை.

0 comments:

Post a Comment