சோமாலிய பிரதமர் Abdiweli Mohamed ஐ இலக்கு வைத்து அந்நாட்டு பெண் ஒருவர் மேற்கொண்ட தற்கொலை குண்டு தாக்குதலில் பிரதமர் மயிரிழையில் உயிர்தப்பியுள்ளார்.
சோமாலிய தலைநகர் இல் இடம்பெற்ற நிகழ்வொன்றிற்கு சிறப்பு அதிதியாக பங்கேற்க வருகை தந்திருந்த சந்தர்ப்பத்திலேயே இந்த தற்கொலை குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றுக்கொண்டிருந்த இந் நிகழ்விற்கு வருகை தந்திருந்த பெண் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தார்.
அதேவேளையில் நிகழ்வில் பங்கேற்றிருந்த சுமார் 20 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் எனவும் அவர்களில் 7 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தற்கொலைகுண்டு தாக்குதலில் ஈடுப்பட்டிருந்த பெண் எந்த தீவிரவாத குழுவுடன் தொடர்புடையவர் என இதுவரை கண்டறியப்படவில்லை என சோமாலிய பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
தற்கொலை குண்டு தாக்குதல் மேறகொள்ளப்பட்ட இடத்தில் குறித்த தற்கொலை குண்டுதாரி பெண்ணுடன் ஆண் ஒருவரும் காணப்பட்டுள்ளார்.











0 comments:
Post a Comment