Thursday, April 5, 2012

நீண்ட தலைமுடியை வெட்டி புதிய மொடலுக்கு மாறிய பிரபல பாடகியான விக்டோரியா பெக்காம்!



37 வயதான விக்டோரியா பெக்காம் நீண்டிருந்த தனது தலைமுடியை கத்தரிக்கோலால் கத்தரித்துள்ளார்.
பாடகியாக உச்சத்தில் இருந்த விக்டோரியா தற்போது வடிவமைப்பாளராக மாறியுள்ளார்.
அவர் தனது நீண்ட கூந்தலை வெட்டிய பின்னர் தரையில் கிடந்த தலை முடியினை ஒன்றாகச் சேர்த்து அதனை படம் பிடித்து ருவிற்றரில் பதிவு செய்திருந்தார்.
அதோடு தனது தலைமுடியை கத்தரித்த பின்னரான ஜீன்ஸ், டாப்ஸ் அணிந்த புதிய படங்களையும் பதிவேற்றி உள்ளார் விக்டோரியா.
அந்தப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் விக்டோரியாவை பலவாறாக கிண்டல் செய்தனர்.
ருவிற்றரில் அவரைப் பின் தொடரும் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்கள் அவரின் புதிய ஸ்டைலை ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர். பலர் அவரை மாதிரியே பின்பற்றவும் தொடங்கியுள்ளனர்.
ஐவர் கொண்ட லண்டனின் பிரபல முன்னாள் ஸ்பைஸ் கேர்ள்ஸ் பாடல் குழுவில் பிரதானமாக இருந்தவர் விக்டோரியா பெக்காம்.
பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்துத் தெரிவித்த விக்டோரியா,
எனக்கு தினமும் நிறைய வேலைகள் இருப்பதால் நான் ஓடிக் கொண்டே இருக்கின்றேன்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் குழந்தை பெற்ற பின்னர் குண்டாக இருந்த நான் தற்போது தொடர் உடற்பயிற்சிகள் மூலம் பழைய தோற்றத்துக்கு வந்துள்ளேன்.
நீண்ட முடியை வெட்டிய பின் என் இரசிகர்கள் பல்வேறு விதமான கருத்துரைகளை வழங்கியுள்ளனர். இப்போது மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

நீண்ட கூந்தலை வெட்ட முதல் இருந்த விக்டோரியா பெக்காமின் தோற்றம்…


0 comments:

Post a Comment