Friday, April 6, 2012

கண்ணிவெடிகளின் கொடூரத்தை வெளிப்படுத்தும் கனேடிய இயக்குனர்!

amputee_documentarian_2_120404
Richard Fitoussi என்ற கனேடியர் கண்ணி வெடிகளுக்கு எதிராக தனது வலுவான எதிர்ப்பை துணிச்சலாகப் பதிவு செய்துள்ளார்.
கனடாவின் திரைப்படத் தயாரிப்பாளரான இவர் தனிப்பட்ட வேலை விடயமாக கம்போடியாவுக்குச் சென்றுள்ளார்.
அங்கு வேலை செய்த போது கிடைத்த அனுபவங்கள் அவரது வாழ்க்கையையே மாற்றி விட்டது.
போர் நடந்து கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் கண்ணிவெடிகளின் பங்களிப்புக் குறித்தும் அவற்றால் ஏற்படும் உயிரிழப்புக்கள் குறித்தும் பெற்றுக் கொண்ட அனுபவங்கள் தான் படமாக வரப் போகின்றது.
போர் நிறுத்தம் பற்றி எதுவுமே ஆயுதங்களுக்குத் தெரியாது. என்று கூறுகிறார் அவர்.
கம்போடியாவின் Fitoussi பிரதேசத்தில் கண்ணிவெடிகளினால் ஏற்பட்டுள்ள ஆபத்துக்கள் குறித்து விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது.
கண்ணி வெடியை தடை செய்தல் மற்றும் ஒழித்தல் தொடர்பாக உள்ள ஒட்டாவா மாநாட்டில் நிறைய நாடுகள் கையெழுத்திடவில்லை. அதில் இலங்கையும் ஒன்று.







0 comments:

Post a Comment