சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல். 5வது போட்டித் தொடரின் முதல் ஆட்டத்தில் ஐ.பி.எல். சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி 19.5 ஓவரில் 112 ரன்னுக்கு சுருண்டது. அதிகபட்சமாக ரெய்னா 36 ரன்கள் எடுத்தார்.
தொடக்க வீரர்கள் டு பிளேசஸ் (3), விஜய் (10) ஆகியோர் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். கேப்டன் தோனி 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். சீட்டு கட்டுபோல் சரிந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 112 ரன்னுக்கு சுருட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் மலிங்கா, ஓஜா, பொல்லார்டு தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். பிராங்ளின் 1 விக்கெட்டை கைப்பற்றினார்.
113 ரன் எடுத் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தொடக்க வீரர் லீவி 35 பந்தில் 50 ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்தார். 3 சிக்சர், 6 பவுண்டரிகளை விளாசினார் லீவி. 16 ரன் எடுத்திருந்தபோது சச்சின் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார்.
பின்னர் வந்த ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய ராய்து – பிராங்ளின் இணை அணியை வெற்றி பெற செய்தது. ராய்து 18 ரன்னும், பிராங்ளின் 25 ரன்னும் எடுத்தனர்.
சூப்பர் கிங்ஸ் தரப்பில் போலிஞ்சர், பிராவோ தலா ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். 50 ரன் எடுத்த மும்பை இந்தியன்ஸ் வீரர் லீவி ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.











0 comments:
Post a Comment