Saturday, May 12, 2012

நவீன தொழில்நுட்பத்தின் விளைவை எச்சரிக்கும் படமே “ஏன் இந்த மயக்கம்”: இயக்குநர்...



இன்றைய நாகரீகம், தொழில்நுட்ப வளர்ச்சியினால் ஏற்படும் விளைவுகள், அபாயங்களை எடுத்துச் சொல்லி எச்சரிக்கும் படம் தான் ஏன் இந்த மயக்கம்.
முற்றிலும் புதுமுகங்களின் ஆதிக்கத்தில் உருவாகும் இப்படத்தை ஷக்தி வசந்த பிரபு இயக்குகிறார். இவர் பிரபுதேவாவிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். ரெயின்போ கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.


பெரும்பாலும் வெட்டி அரட்டைதான். குறிப்பாக டீன் ஏஜ் வயதினர் செல்போன் அரட்டைக்கு அடிமையாகிக் கிடக்கிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கூட லேப்டாப்பில் மூழ்கிக் கிடக்கிறார்கள்.
அவர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன பார்க்கிறார்கள், யாருடன் சாட் செய்கிறார்கள் என்று பெற்றோர் கவனிப்பது இல்லை. கண்காணிப்பதும் இல்லை.
தவறான தொடர்புகள், தவறான பரிமாற்றங்களில் ஜாலியாக ஆரம்பித்து விபரீதத்தில் முடிகிறது. இப்படி நிஜத்தில் நடந்த பல சைபர் க்ரைம்களை அடிப்படியாக வைத்து இப்படத்தை உருவாக்கி வருகிறோம் என்கிறார் ஷக்தி வசந்த பிரபு.
பிரபுதேவாவின் அண்மைப் படமான எங்கேயும் காதல் வரை பல படங்களில் பணியாற்றியுள்ளார் ஷக்தி வசந்த பிரபு. தருண்கோபியுடனும் வசனகர்த்தா பிரபாகரனுடனும் பணியாற்றிய அனுபவத்தை பெற்றவர்.
ஒளிப்பதிவு செய்பவர் வேல்முருகன். இவர் நீரவ்ஷாவின் உதவியாளர். படத்தை ரெயின்போ கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் எம்.ஆண்டனி ஈ.டி திரைத்துறைக்குப் புதியவர் தான். இவர் நெல்லை மண்ணைச் சேர்ந்தவர்.
படத்தின் நாயகன் ராஜீவ் குமார், நாயகி ரித்தியா, இன்னொரு நாயகி சொர்ணா, டெல்லா, விக்னேஷா ஆகியோரும் முக்கிய பாத்திரங்கள் ஏற்றுள்ளனர்.
இந்த நாயகிகளில் ரித்தியா பெங்களூர் மொடல். சொர்ணா மானாட மயிலாட நிகழ்ச்சியில் முன்னனியில் பரபரப்பாக சீசன் 7ல் ரியால்டிஷோவில் பங்கேற்று இருப்பவர்.
கேரளாவிலுள்ள ஒரு டிவி நடத்திய போட்டியில் 10 லட்சம் வென்று அசத்தியவர். டெல்லா பரதநாட்டியக்கலைஞர். கேரளாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கன்னட இயக்குநர் தன் படத்திற்கு தேர்வு செய்துவிட்டார். இன்னொருவர் விக்னேஷா புதுமுகம்.
வில்லன் ஜவா. நவீன மேடை நாடகக் கலைஞர். சிலப்பதிகாரத்தை பிரெஞ்சு மொழியில் நடத்தி பல பிரெஞ்சுக்காரர்களிடம் கொண்டு சேர்த்து வருபவர்.
காமெடி கலாட்டாவுக்கு நெல்லை சிவா ,சுப்புராஜ், கோவை செந்தில், தேனி முருகன், சுமதி உள்ளனர். இவர்கள் மட்டுமல்ல ஜெகன், அசோக், ரவிசந்திரன், சிங்கப்பூர் சந்தன், பரோட்டா பிரபு,எஸ்.எஸ்.சந்திரன் மருமகன் பெரியகுளம் ஈ.கோபி ஆகியோரும் அறிமுகமாகிறார்கள்.
சென்னை, பாண்டிச்சேரி,ஏற்காடு போன்ற இடங்களில் இதுவரை படப்பிடிப்பு நடந்துள்ளது. படத்தில் வரும் காட்டுப்பகுதிகள் இதுவரை யாரும் நுழையாத இடங்களாகும். லொக்கேஷன்கள் படத்தில் பேசப்படும் அம்சமாக இருக்கும்.
ஏன் இந்த மயக்கம் க்ரைம் கதை என்றாலும் காதல், நகைச்சுவை எல்லாமும் கலந்த முழு நீள கலகலப்பான கமர்ஷியல் படம்.
படத்திற்கு இசை சித்தார்த் பாபு புதியவர் தான். படத்தில் 6 பாடல்கள். ஏகாதசி, சாரதி, தமிழமுதன், கருணா ஆகியோர் எழுதியுள்ளனர். படத்திற்கு வசனம் ரஸ்ஸல் ஜே.ராஜ்.
நகைச்சுவை வசனங்களை எழுதியிருப்பவர் பிரகாஷ். இவர் வடிவேலுவின் பல படங்களுக்கு நகைச்சுவைப் பகுதி எழுதியவர்.
படத்திற்கு ஏலகிரியில் உள்ள சூசைட்பாயிண்ட் எனப்படும் தற்கொலை முனையில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள். திண்டுக்கல் அருகில் உள்ள தாண்டிக்குடி. அங்கு 2000 வருட பழமையான ஒரு முருகன் கோயில் உள்ளது. அங்கு சென்று காட்சிகளை எடுத்திருக்கிறார்கள். மலையும் மலை சார்ந்த பகுதிகள் ரசிக்கும்படி படமாகியுள்ளது.
கலை இயக்கம் ராகுல். இவர் கதிரின் உதவியாளர். படத்தொகுப்பு பீட்டர் பாபியா. நடனம் விமல்.பிருந்தாவின் உதவியாளர். ஸ்டண்ட் மகேஷ் மாஸ்டர்.
இன்று சமுதாயத்தில் நடக்கும் குற்றங்கள் பலவற்றில் செல்போன்கள் தவறாகப் பயன்படுத்துவதால் நடக்கின்றன. செல்போன், லேப்டாப் அற்புதமான சாதனங்கள்.
தவறாகப் பயன்படுத்தினால் ஆட் கொல்லிகளாகவும் கூட மாறலாம். எச்சரிக்கை. குறிப்பாக இப்படம் பதின்பருவ அதாவது டீன் ஏஜ் வயதில் பிள்ளைகள் வைத்திருக்கும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் எல்லாருக்கும் எச்சரிக்கை தரும். இறுதி கட்டப்படப்பிடிப்பு நடந்து வருகிறது என்றார்.


  

0 comments:

Post a Comment