Monday, May 7, 2012

சிவபூமி என போற்றப்படும் திருக்கேதீச்சரம் ஆக்கிரமிக்கப்பட்டது...


போர் முடிவடைந்துள்ள நிலையிலும்கூட அரசு அவர்களை இன்னும் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தவில்லை. கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை என்ற புராணத்தை ஓதி அங்கு வாழ்ந்து வந்த மக்களை வெளியிடங்களில் அலைய விடுகின்றது.
இதற்குத் தீவிரமான அரசின் ஆதரவும் உண்டு. அங்கு, சுமார் 1,500 கிலோ எடைகொண்ட புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அத்துடன், நின்றுவிடவில்லை அரசின் அராஜகம். அதற்கு ஒருபடி மேலேசென்று திருக்கேதீச்சர ஆலய கிராமத்தில் சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றும் நடவடிக்கையிலும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் இங்கு மேற்கொள்ளபட்ட தொல்லியல் ஆய்வுகள் தமிழர் சார்பான வரலாற்றெழுத்தியலை முன்னிலைப்படுத்துவதாக இருப்பினும் இப்போது மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசின் கீழ் பணியாற்றும் தொல்லியலாளர்கள் அது சிங்களவர்களுக்கும், பௌத்த மதத்தற்கும் உரியது என்று நிரூபிக்க கூடியளவிலான ஆய்வு முடிவுகளை முன்வைத்தாலும் வியப்பில்லை.
எனினும், இதனால் நடக்கப்போகும் மாற்றங்கள் எதுவும் இல்லை என்பது தமிழர்களுக்கு நன்கு தெரியும். இலங்கை அரசு பெயரளவில் மட்டும்தான் இவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கின்றது என்பது அவர்களுக்கு நன்கு புரியும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி மஹிந்த அரசு அங்கே புத்தர் சிலையை அமைத்தே தீரும் என சிலர் அடித்துக் கூறுகின்றனர்.
இதற்கு அவர்கள் தகுந்த காரணிகளைக் கோடிட்டுக் காட்டுகின்றனர். திருக்கேதீச்சரத்தில் மட்டுமல்ல, திருகோணமலை பொது வைத்தியசாலை வளாகத்தில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலை அகற்றுவதற்கும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது. வீதி அபிவிருத்தி என்ற போர்வையிலேயே இந்தத் திட்டமிட்ட செயல் அரங்கேற்றப்படுகின்றது.
அதேவேளை, இலங்கைத் தீவில் சிறுபான்மையின மக்கள் பூரண சுதந்திரத்துடனேயே வாழ்கின்றனர் என உலகுக்குப் போலிப் பிரசாரங்களைச் செய்யும் மஹிந்த அரசு, நாட்டில் சிறுபான்மையின மக்களை அடக்கி ஒடுக்கி ஆள்வதற்கே முயற்சிக்கின்றது. நாட்டில் அண்மைக்காலமாக அரங்கேறும் சம்பவங்கள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

0 comments:

Post a Comment