Wednesday, April 4, 2012

ஐ.பி.எல் தொடர்: மும்பை இண்டியன்ஸ் அணிக்கு 113 ஓட்டங்கள் வெற்றி இலக்கு


ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கெதிரான முதல் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணி 113 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்க உள்ளது.
ஐந்தாவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இண்டியன்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதனையடுத்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி துடுப்பெடுத்தாட தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஃபப் டு பிளஸ்ஸிஸ் 3 ஓட்டங்களும், முரளி விஜய் 10 ஓட்டங்களும் எடுத்து ஏமாற்றமளித்தனர்.
மும்பை அணியின் அதிரடியான பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிய தொடங்கியது.
இறுதியில் சென்னை அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளது.
சுரேஷ் ரெய்னா மட்டுமே அதிகபட்சமாக 36 ஓட்டங்கள் எடுத்துள்ளார். டிவைன் பிராவோ 19 ஓட்டங்களும், பத்ரிநாத் 10 ஓட்டங்களும் எடுத்தனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஓற்றை இலக்க ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
இதனையடுத்து மும்பை இண்டியன்ஸ் அணி 113 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலப இலக்குடன் களமிறங்க உள்ளது.

0 comments:

Post a Comment