Thursday, April 5, 2012

புலிக்கும் சிங்கத்துக்கும் சிறையில் திருமணம், சாட்சியாக அப்பாத்துரை எம்.பி!


கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இன்று மிக வித்தியாசமான திருமணங்கள் இரண்டு இடம்பெற்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர் ஒருவர் சிங்கள பெண் ஒருவரை திருமணம் செய்து இருக்கின்றார்.
அதே போல போதைப் பொருள் சம்பந்தப்பட்ட வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டு இருக்கின்ற தமிழ் இளைஞன் ஒருவர் முஸ்லிம் யுவதியை திருமணம் செய்து இருக்கின்றார்.
முன்னாள் புலி உறுப்பினரான இளைஞனுக்கு பெயர் சக்திவேல் இலங்கேஸ்வரன். வயது 34. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை படுகொலை செய்கின்ற முயற்சிக்கு உதவி, ஒத்தாசை வழங்கினார் என்கிற குற்றச்சாட்டு வழக்கில் 30 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு இருப்பவர். இத்தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்து உள்ளார். இவர் வவுனியாவைச் சேர்ந்த  குணசேன சுதர்சனி என்பவரை திருமணம் செய்து உள்ளார். சுதர்சனிக்கு வயது 32. இருவருக்கும் இடையில் 15 வருட காதல். இத்திருமணத்துக்கு சாட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி கையொப்பம் இட்டு உள்ளார்.
அதே போல பாலச்சந்திரன் புஷ்பராசா ( வயது 34 ) என்பவர் முஹமட் ராசிக் பாத்திமா ( வயது 23 ) என்பவரை திருமணம் செய்து உள்ளார். இருவருக்கும் இடையில் 10 வருட காதல்.
சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டில் இத்திருமணங்கள் இடம்பெற்று உள்ளன. மனிதாபிமான கண்ணோட்டத்தில் இத்திருமணங்களை நடத்திக் கொடுத்து உள்ளார்கள் என்று கூறுகின்றார்கள்.










0 comments:

Post a Comment