Wednesday, April 4, 2012

தமிழுக்கு வருகிறாரா அமிதாப்பச்சன்?


ஹிந்தியின் பிரபல சுப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சன் தமிழ் படத்தில் நடிக்க வருகிறார்.காமராஜ், முதல்வர் மகாத்மா போன்ற சமூக நோக்குள்ள படங்களை எடுத்த பாலகிருஷ்ணன்
தற்போது இந்தியா பாகிஸ்தான் உறவை வைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் முக்கிய ரோலில் அமிதாப்பச்சன் நடிக்க இருக்கிறார்.

இந்த விடயம் தொடர்பாக பாலகிருஷ்ணன் கூறியுள்ளதாவது,
வியாபாரம் செய்வதற்காக இந்தியா வந்து கடைசியில் நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்து உடன் இந்தியா, இன்று நட்பு பாராட்டுகிறது.
ஆனால் அதே நமது அண்டை நாடான பாகிஸ்தான் உடன் பகையில் இருக்கிறது. நான் இயக்க போகும் புதிய படம் இந்தியா-பாகிஸ்தான் உறவை பற்றியது. இப்படம் பாகிஸ்தானின் ஜின்னா முதல் இப்போது கசாப் வரை உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்படும்.
இதில் முக்கிய ரோலில் அமிதாப் பச்சனை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
தற்போது இந்தியா- பாகிஸ்தான் தொடர்பான படத்தில் நடிக்க வைக்க அமிதாப்புடன் பேச்சு வார்த்தைகள் தொடங்கியுள்ளதாம்.

0 comments:

Post a Comment