Monday, April 2, 2012

இந்தியப் பிரதமரை சந்திக்கிறார் பாக் அதிபர்...

இந்தியாவுக்கான ஒரு குறுகிய விஜயத்தை அடுத்த வாரம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தானிய அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி, அப்போது இந்தியப் பிரதமரை தான் சந்தித்து பேசவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஆனால் அவரது இந்த விஜயத்தின் போது அரசியல் சந்திப்புகள் ஏதும் இருக்காது என்று முன்னர் அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்திருந்தனர்.
இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரிலுள்ள ஒரு ஸூஃபி வழிபாட்டுத் தலத்துக்கு அவர் தனிப்பட்ட முறையில் விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக மட்டுமே அதிகாரிகள் முன்னர் கூறிவந்தனர்.
கடந்த ஏழு ஆண்டுகளில் பாகிஸ்தான் நாட்டின் அரச தலைவர் ஒருவர் இந்தியாவுக்கு வரவுள்ளது இதுவே முதல் முறை.
அணு ஆயுத வல்லமை கொண்ட இந்த இரு நாடுகளுக்கும் இடையே அண்மைக் காலமாக இடம்பெற்ற உயர்மட்ட சந்திப்புகளும், தமக்கிடையேயான வர்த்த உறவுகளை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளும் இருதரப்புக்கும் இடையேயான பதற்றங்களை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தகுந்தது.

0 comments:

Post a Comment