Thursday, May 10, 2012

மம்தாவுக்கு பிடித்த காதல் பாடல்...

கொலிவுட்டில் அருண் விஜய், மம்தா மோகன் இருவரும் இணைந்து 'தடையறத் தாக்க' படத்தில் நடித்துள்ளார்கள்.
இப்படத்தை இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனனின் உதவியாளர் மகிழ்திரு மேனி இயக்கியுள்ளார்.

சாலிக்கிராமத்தில் இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
இவ்விழாவில் திரையுலக பிரபலங்கள் உட்பட படத்தில் நடித்தவர்கள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.
படத்தின் ட்ரைலர் காண்பிக்கப்பட்டது. அருண் விஜய், மம்தா இருவரும் நடித்த காதல் பாடல், கவர்ச்சி அழகிகளுடன் அருண் விஜய் ஆடிய 'குத்தாட்ட 'பாடலும் திரையிடப்பட்டது.
இவ்விழாவுக்கு வந்திருந்தவர்கள் ஆரவாரத்தோடு ரசித்தார்கள். தடையறத்தாக்க படத்தின் நாயகி மம்தா, இந்த விழாவில் கலந்து கொள்ள வில்லை.
'தடையறத்தாக்க படத்தில், தமன் இசையில் வரும் கேளாமலே பாடல், என் மனதை இதமாக வருடிய பாடல். பஹ்ரைனில் நான் இருந்ததால் என்னால் விழாவில் கலந்து கொள்ள முடியாமல் போனது என்று மம்தா கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment