Saturday, May 5, 2012

மும்பையை வீழ்த்துமா சென்னை சூப்பர் கிங்ஸ்???

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 12வது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணியுடன் இன்று மோதுகிறது.
துடுப்பாட்டத்தில் டுபிளெஸ்சிஸ், ரெய்னா நல்ல பார்மில் உள்ளனர். அணித்தலைவர் டோனி கணிசமாக ஓட்டங்கள் எடுத்தாலும், அவரது அதிரடி ஆட்டம் தொலைந்து வெகு நாளாகிவிட்டது. பிராவோ, அல்பி மார்க்கெல் முன் வரிசையில் வந்தால் ஸ்கோர் வேகத்தை அதிகரிக்கலாம். விஜய்க்கு பதில் மைக்கேல் ஹஸி சேர்க்கப்படுவதும் கட்டாயம்.
மலிங்கா, முனாப் வேகமும், ஹர்பஜன் அனுபவ சுழலும் மும்பைக்கு கை கொடுக்கலாம். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை.

0 comments:

Post a Comment