Wednesday, April 4, 2012

27 வருடங்களுக்கு பின் யாழில் மீள்குடியேறுகின்றார் தந்தை செல்வாவின் புதல்வர்!

தந்தை செல்வாவின் புதல்வர் சந்திரஹாசன் யாழ்ப்பாணத்தில் நிரந்தரமாக தங்குகின்றமைக்கு முடிவு எடுத்து உள்ளார்.

இவர் 1983 ஆம் ஆண்டு கலவரத்தை தொடர்ந்து இந்தியாவுக்கு தப்பி ஓடினார். இவரது மூன்று பிள்ளைகளும் சென்னையில் பயின்றார்கள். திருமணம் செய்து விட்டார்கள்.
சுமார் 27 வருட அகதி வாழ்க்கைக்கு பின் தெல்லிப்பளையில் உள்ள பரம்பரை வீட்டில் மீள குடியேறுகின்றார். 1947 ஆம் ஆண்டு முதல் 1977 ஆம் ஆண்டு வரை தமிழர் அரசியலின் மையமாக இவ்வீடுதான் இருந்து வந்திருக்கின்றது. யுத்தத்தால் பேரழிவுகளை எதிர்கொண்டு இருக்கின்றது.
இவ்வீடு அதியுயர் இராணுவ பாதுகாப்பு வலய பிரதேசத்துக்குள் இருந்து இருக்கின்றது. ஒருவாறு பகீரத முயற்சிகள் செய்து மீட்டு இருக்கின்றார்.
தற்போது மாதத்தில் இரு தடவைகள் நாட்டுக்கு வந்து செல்கின்றார்.
இவருக்கு வயது 69 ஆகின்றது. தீவிர அரசியலில் ஈடுபட உள்ளார் என்று தகவல்கள் கசிந்து உள்ளன.

0 comments:

Post a Comment