Wednesday, April 4, 2012

சுற்றுலாத் தலங்களாக பிரபலம் அடைந்து வருகின்ற பிரபாகரனின் முல்லைத்தீவு பதுங்கு குழி!


தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் முல்லைத்தீவு பதுங்கு குழியை அண்டிய இடங்கள் தற்போது கடைத் தெருக்களாக மாறி வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இரும்புக் கோட்டைகளில் ஒன்றாக முல்லைத்தீவு விளங்கியது.
இங்கு புலித் தலைவர்களின் வாசஸ்தலங்கள், பதுங்கு குழிகள், மாவீரர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் மண்டம் ஆகியன உட்பட ஏராளமான கட்டமைப்புக்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஆனால் இவ்விடங்களை இராணுவம் கைப்பற்றிய பின்னர் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் முதல் பொதுமக்களின் பார்வைக்கு உரிய பொது இடமாக இது விளங்கி இருக்கின்றன.
இங்கு சென்று பார்வையிட முன் அனுமதி பெற தேவை இல்லை.
நாளாந்தம் 3000 பேர் வரை இங்கு சென்று பார்வையிட்டு வருகின்றார்கள்.
பிரபாகரனின் பதுங்கு குழி நிலத்துக்கு கீழ் அமையப் பெற்றது. மிகவும் வைரமான சுவர்களை கொண்டது. குண்டு துளைக்க முடியாத கதவுகளை இப்பதுங்கு குழி கொண்டிருந்திருக்கின்றது. உள்ளே மலசலகூடங்கள் உள்ளன.
இறுதி அஞ்சலி இல்லம், கடல் புலிகளின் தலைவர் சூசையின் பாதுகாப்பு இல்லம், கடல் புலிகளால் பயன்படுத்தப்பட்ட தடாகம் போன்றன இங்கு உள்ள அற்புதமான தோற்றப்பாடுகள்.
ஆனால் இவை இன்று சுற்றுலாத் தலங்களாக பிரபலம் அடைந்து வருகின்ற நிலையில் இச்சுற்றாடலில் சாலையோர கடைகள் பலவும் முளைத்து உள்ளன.


0 comments:

Post a Comment