பதுளை மத்திய பஸ்தரிப்பு நிலையத்தில் பொலிஸாருக்கும் பயணிகளுக்குமிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இரண்டு பொலிஸார் உட்பட மூவர் காயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவரைத் தேடி வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சன நெருக்கடி தொடர்பில் ஏற்பட்ட போக்குவரத்துப் பிரச்சினை ஒன்று பற்றி விசாரிக்கச் சென்ற பொலிஸாருக்கும் பயணிகளுக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியதாக அங்கு நின்றிருந்தவர்கள் தெரிவித்தனர்.
பொலிஸாருடன் கைகலப்பில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர். ___

0 comments:
Post a Comment