Saturday, March 10, 2012

கிரிக்கெட் வீரர் பட்டோடி காலமானார்





மன்சூர் அலி கான் பட்டோடி

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மன்சூர் அலி கான் பட்டோடி வியாழனன்று மாலை புதுடில்லியில் காலமானார். அவருக்கு வயது 70. நுறையீரல் நோயினால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.

மன்சூர் அலி கான் பட்டோடி

பட்டோடி தனது 21 வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட ஆரம்பித்தார். இங்கிலாந்து அணிக்கு எதிராக 1961 ஆம் ஆண்டு டில்லியில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதன் முதலாக விளையாடினார்.
1961 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை இந்திய அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 40 போட்டிகளில் இந்திய அணிக்கு தலைமையேற்றிருந்தார்.
இந்திய அணிக்காக விளையாட அவர் தேர்வு செய்யப்பட்டிருந்த வேளையில், ஒரு கார் விபத்தில் அவரது வலது கண்ணில் பார்வை பாதிக்கப்பட்டது. இருந்தும் அவர் இந்திய அணிக்காக இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் களமிறங்கி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 103 ஓட்டங்களை எடுத்தார்.
இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு, 1962 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு விளையாடச் சென்ற இந்திய அணியில் அவர் தேர்தெடுக்கப்பட்டார். அப்போது அணிக்கு தலைவராக இருந்த நாரி காண்ட்ராக்டர், பார்பேடோஸ் நகரில் இடம்பெற்ற போட்டியில், வேகப்பந்து வீச்சாளர் சார்லி கிரிஃபித் வீசிய பந்தில் காயமடைய, அணிக்கு தலைமையேற்கும் பொறுப்பு பட்டோடியிடம் வழங்கப்பட்டது.
அப்போது உலகளவில் மிக இளவயதில் ஒரு கிரிக்கெட் அணியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் என்கிற பெருமையை பட்டோடி பெற்றார். அந்த சாதனை 2004 ஆம் ஆண்டு வரை இருந்தது.
கிரிக்கெட் உலகில் டைகர் என்று அன்புடன் அழைக்கப்பட்டார் பட்டௌடி. அவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றது. கிரிக்கெட் உலகில் வல்லரசுகள் என்று கருத்தப்பட்ட மேற்க்கிந்திய தீவுகள், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இந்திய அணியும் வெற்றி பெறமுடியும் என்கிற நம்பிக்கையை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியவர் பட்டோடி என்று விமர்சகர்கள் இன்றும் கூறுகிறார்கள்இளவயது மன்சூர் அலி கான் பட்டோடி
அவர் இந்திய அணிக்கு தலைமையேற்றிருந்த சமயத்தில், பிஷன்சிங் பேடி, பிரசன்னா, சந்திரசேகர், வெங்கட்ராகவன் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் குறைவாக இருந்ததால், சுழல்பந்து வீச்சாளர்களே அணிக்கு வெற்றியைத் தேடித் தரமுடியும் என்று பட்டோடி உறுதியாக நம்பினார்.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே
வெளிநாடுகளில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் போட்டியை வென்றது. டுனேடின் நகரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலேயே இந்தியா இந்த வெற்றியை பெற்றது. இந்த வெற்றியே 1968 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரை 3-1 என்கிற கணக்கில் இந்தியா வெல்ல முடிந்தது.
தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 2793 ஓட்டங்களை அவர் எடுத்தார். சராசரியாக ஆட்டத்துக்கு 35 ஓட்டங்கள் என்கிற கணக்கில் இருந்தது அவரது ஆட்டம்.
1964 ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிராக டில்லியில் நடைபெற்ற போட்டியில் 203 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.அதுவே அவர் ஒரு போட்டியில் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாக எடுத்த ஓட்டங்களும் ஆகும்.
1967-68 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மெல்பர்ண் நகரில், ஒரு கண்ணில் பார்வை குறைவாக உள்ள நிலையிலும்,ஒரு காலில் காயம் ஏற்பட்டிருந்த நிலையிலும் அவர் எடுத்த 75 ஓட்டங்கள் அவரது திறமைக்கு ஒரு எடுத்துக்காட்டு இன்று இன்றளவும் பேசப்படுகிறது.
1975 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிறகு கிரிக்கெட் விளையாட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்றார். அதன் பிறகு போட்டிகளுக்கான நடுவராக அவர் செயலாற்றி வந்தார்.
பிரபல திரைப்பட நடிகை ஷர்மிளா தாகூரை அவர் மணம் செய்து கொண்டார். எனினும் அவரது வாரிசுகள் யாரும் கிரிக்கெட் விளையாட்டுக்கு வரவில்லை என்பதும், அனைவரும் திரைப்படத் துறையில் நுழைந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment