காலையில் எழும் போது ஏதாவது ஒரு விடயம் நம் மனதை பாதித்து விட்டால், அன்றைக்கு அவ்வளவு தான் எந்த ஒரு வேலையும் சரியாக நடக்காது. இவ்வாறான நேரத்தில் அது மனதை பாதிக்காத அளவிற்கு சில காரியங்களை செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
இசையில் மூழ்கினால் உற்சாகம் ஏற்படும், அதேபோல சொக்லேட் சாப்பிட்டாலும் மனம் உற்சாகமடையும் என்கின்றனர் நிபுணர்கள்.
காலையில் எழுந்ததும் காபி அல்லது டீ குடிப்பது பலரது பழக்கம். இது உற்சாகமூட்டும் பானம் என்பதால் இதனை குடிக்கின்றனர்.
மனம் கொஞ்சம் சரியில்லை என்றாலும் காபி, டீ குடிக்காலாமாம். இதனால் மனதில் ஏதேனும் சஞ்சலம் இருந்தாலும் மாறிவிடும்.
இசையில் மூழ்கினால் மனதில் எந்த வித கவலையும் குடியேறாது. சின்னதாய் அப்செட் ஆனாலும் மனதிற்கு பிடித்த பாடலை ஹெட் செட் போட்டு கேளுங்கள். மனம் உற்சாகமடையும்.
நல்ல நண்பன் இருந்தால் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை. எப்பொழுதெல்லாம் மனம் கஷ்டப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் உங்களின் நண்பரிடம் பேசுங்கள். உற்சாகம் பிறக்கும்.
சொக்லேட் மிகச்சிறந்த உற்சாக மூட்டக்கூடிய உணவுப்பொருள். மன அழுத்தம் ஏற்படும் நேரங்களில் டார்க் சொக்லேட் சாப்பிட்டால் அது மன அழுத்தத்தைப் போக்கும் என்று அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இது மன அழுத்தம் ஏற்படுத்தும் ஹோர்மோன் சுரப்பியை கட்டுப்படுத்துகிறதாம். அதுபோல சொக்லேட் சாப்பிடுவதால் உற்சாகம் ஆரம்பமாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அதிகாலை வானம், பசுமையான காட்சிகள், விழும் அருவி, ஆர்ப்பரிக்கும் கடல் போன்ற இயற்கை அழகினை ரசித்தால் போதும் உற்சாகம் பிறக்கும்.
எப்பொழுது எல்லாம் மனதிற்கு பாதிப்பு ஏற்படுகிறதோ வண்டியை எடுத்து கொண்டு ஒரு ஜாலி ட்ரைவ் கிளம்புங்களேன்.