Wednesday, June 20, 2012

நியூசிலாந்தில் ஹனிமூன் கொண்டாடிய பிரசன்னா-சினேகா....


நியூசிலாந்தில் தேனிலவு கொண்டாடிவிட்டு சினேகா-பிரசன்னா ஜோடி சென்னை திரும்பியுள்ளனர். தேனிலவு பயணம் குறித்து நடிகர் பிரசன்னா, திருமணத்திற்கு பிறகு சினேகாவுக்கு “ஹரிதாஸ்” படப்பிடிப்பு இருந்தது.
இதற்கிடையே கிடைத்த ஓய்வு நேரத்தில் நியூசிலாந்து சென்றோம். அங்கு இரண்டு வாரம் தங்கியிருந்து தேனிலவு கொண்டாடிவிட்டு சென்னை திரும்பியுள்ளோம் என்றார்.
தற்போது முரண் ராஜவ் மாதவ் இயக்கத்தில் நடிக்கின்றேன். அதற்குமுன்பு, மலையாளத்தில் வந்த “டிராபிக்” தமிழ் ரீமேக்கில் நடிக்கின்றேன்.
சரத்குமார், பிரகாஷ் ராஜ் நடிக்கும் இப்படத்தில் எனக்கு வலுவான கதாப்பாத்திரம் தரப்பட்டுள்ளது.
ஹரிதாஸ் படத்தில் நடிக்கும் சினேகா முழுமையான இல்லத்தரசியாக மாற ஆசைப்படுவதால் இப்போது எந்தப்படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ள வில்லை என்று பிரசன்னா கூறினார்.


   

0 comments:

Post a Comment