Saturday, June 16, 2012

யாழில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறைக் கட்டிடத்தை டக்ளஸின் அலுவலமாக மாற்ற முயற்சி...

யாழ். மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் முக்கிய அரசியல் செயற்பாட்டு நிலையமாக விளங்கிய பொற்பதி அரசியல்துறை செயலக கட்டிடத்தில், தற்போது ஈ.பி.டி.பியினர் முகாமிட்டு அதனை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு முயற்சித்து வருவதாக பிரதேச மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குறித்த கட்டிடத்தில், 1995ம் ஆண்டு வரையும், பின்னர் சமாதான காலத்திலும், புலிகள் தமது அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்திவந்தனர். எனினும் யுத்தம் தீவிரமடைந்த 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில் புலிகள் வெளியேறினர்.
இந்நிலையில் யுத்தத்தின் பின்னர் இடம்பெயர்ந்த குடும்பமொன்று இதில் தங்கியிருந்தது. தற்போது அந்தக் குடும்பத்தையும் அங்கிருந்து துரத்திவிட்டு, அப்பகுதியிலுள்ள ஈ.பி.டி.பி அடிவருடிகளின் ஆதரவுடன் கட்டிடத்தை தம்வசப்படுத்தி அதனை அமைச்சர் டக்ளஸின் அலுவலகமாக மாற்ற முயற்சித்துள்ளனர். இதற்கென தற்போது கட்டிடத்தின் முகப்பில் அமைச்சரின் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
  

0 comments:

Post a Comment