Tuesday, June 26, 2012

மருத்துவ குணங்கள் நிறைந்த பப்பாளி !

ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் பப்பாளியின் பழம், காய் மற்றும் அதன் பாலில் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மூட்டுவலி உள்ளவர்களுக்கும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கும், நீரிழிவு நோயாளிகளுக்கும் பப்பாளி நல்லது. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.

பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும். பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.

0 comments:

Post a Comment