Saturday, June 23, 2012

முகமாலையில் கண்ணி வெடியில் சிக்கி மூவர் காயம்!

யாழ். முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணி வெடியில் சிக்கிய மூவர் படுகாயமடைந்த நிலையில், மூவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களே விபத்தில் சிக்கியுள்ளனர்.


கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் நிறுவன ஊழியர்களே இவ்வாறு காயமடைந்துள்ளதாகவும் இதில் பெண் ஒருவர் அடங்குவதாகவும் தெரியவருகிறது.


இன்று காலை 7 மணியளவில் கண்ணிவெடியகற்றும் பணியில் ஈடுபட்டபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

0 comments:

Post a Comment