Saturday, June 23, 2012

முதற்கட்டமாக திருமுறிகண்டியில் 80 குடும்பங்கள் மீள்குடியேற்றம்!


யுத்தத்தின் பின்னர் இதுவரை மீள்குடியேற்றப்படாதிருந்த திருமுறிகண்டி கிராமத்தைச் சேர்ந்த 80 குடும்பங்கள் இன்று மீள்குடியேற்றப்பட்டனர்.
கடந்த மூன்று வருடங்களாக நலன்புரி நிலையங்களிலும் உறவினர் நண்பர்கள் வீடுகளிலும் வசித்து வந்த சுமார் 80 வரையான குடும்பங்கள் இன்று முதற்கட்டமாக இப்பகுதியில் மீள்குடியேற்றப்பட்டனர்.
இவர்களில் நலன்புரி நிலையங்களில் வாழ்ந்தவந்த 47குடும்பங்களும் உறவினர் நண்பர்கள் வீடுகளில் வசித்துவந்த 33 குடும்பங்களும் உள்ளடங்குகின்றனர்.
இவர்களுக்கான காணி ஆவணங்களை வழங்கிய அம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இக்குடும்பங்களுக்கு தற்காலிக குடியிருப்புக்களை அமைப்பதற்காக 94 இலட்சம் ரூபா நிதியினையும் ஒதுக்கீடு செய்து அதற்கான அவணத்தையும் அதிகாரிகளிடம் கையளித்தார்.
147 குடும்பங்களை உள்ளடக்கிய திருமுருகண்டி கிராமத்தில் முதற்கட்டமாக 80 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.
இன்று நண்பகல் 12.30 மணிக்கு சம்பிரதாய பூர்வமாக நடைபெற்ற இம் மீள்குடியேற்ற நிகழ்வில்,
அமைச்சர் றிசாட் பதியுதீன், அமைச்சர் சி.பி ரட்ணாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஆளுனர் ஜிஏ சந்திரசிறீ, பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாருக், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் வேதநாயகம், ஒட்டுசுட்டான் உதவி அரச அதிபர் திரேஸ்குமார், திருமுறிகண்டி கிராம அலுவலர் குபேந்திரன், இராணுவ உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

0 comments:

Post a Comment