தற்போதைய காலகட்டத்தில் திரையுலகில் இருக்கும் நடிகர், நடிகைகள் உதவி செய்யும் மனப்பான்மை உடையவர்களாக இருக்கின்றனர்.
சமுதாயத்தில் கஷ்டப்படும் ஏழைக்குடும்பங்களுக்கு கல்வி மற்றும் உதவி செய்வது என பெரும்பாலான உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்த விடயத்தில் நடிகர் ஜீவாவும் தற்போது களமிறங்கியிருக்கின்றார். கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகிலுள்ள வெள்ளிமலையை சேர்ந்த முகராசி என்பவர் மகன் ராஜபாண்டி (18).
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் வெள்ளச்சி, பாசி மற்றும் மாலை கோர்த்தல், விவசாயக் கூலி வேலை செய்கிறார்.
ராஜபாண்டியை அவரது பெரியப்பா லட்சுமணன், ஊத்தங்கரை தனியார் பள்ளியில் சேர்த்தார். பாசி மாலை தயாரித்து விற்பனை செய்தும், மாந்தோப்புக்கு காவல் பணிக்கு சென்றும் ராஜபாண்டியை படிக்க வைத்தார்.
பிளஸ் 2 தேர்வு முடிவில், 1167 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த ராஜபாண்டி, மதிப்பெண் தரப்பட்டியலில் 197.5 கட் ஆப் மார்க் வாங்கினார். வறுமையில் இருந்தாலும், நன்கு படித்து கல்வியில் சாதனை படைத்த ராஜபாண்டி, மருத்துவம் படிக்க விரும்பினார்.
ஆனால், அதற்கு பணம் இல்லாமல் தவித்தார். இந்நிலையில் இந்த விடயம் தமிழக பத்திரிக்கை ஒன்றின் மூலமாக நடிகர் ஜீவாவுக்கு தெரிய வந்தது. உடனே நடிகர் ஜீவா அம்மாணவனை அழைத்து அவன் மருத்துவ படிப்பிற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக தெரிவித்தார்.
அதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக அம்மாணவனுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை காசோலையாக தந்தார்.
0 comments:
Post a Comment