Sunday, June 10, 2012

யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மீது அபாண்ட பழி...


இதனை அடுத்து அது தொடர்பிலான செய்தி தமிழ்வின்னில் கடந்த 02-06-12 அன்று வெளிவந்தது. அதன் பின்னர் யாழ் குடாவின் ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் குறித்த செய்தி முக்கிய இடத்தை பிடித்தது.
அதன் பின் இன்று யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பொலிசில் செய்த முறைப்பாடானது ஒருசில வைத்தியர்களின் நடவடிக்கையென யாழ் குடாவின் ஊடகவியலாளர்களை அழைத்து தனது நிலையினையும் சம்பவம் தொடர்பிலும் விளக்கம் அளித்ததுடன் யாழ் போதனா வைத்தியசாலை தொடர்பான பத்திரிகைச் செய்திகள் தொடர்பாக பணிப்பாளரின் விளக்கம் என்ற தலைப்பில் ஊடக அறிக்கையொன்றினையும் வைத்திய கலாநிதி பவானி இன்று வெளியிட்டுள்ளார்.
யாழ் போதனா வைத்தியசாலையில் ஜப்பானிய அரசாங்க நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் புதிய கட்டிடத் தொகுதியை திறந்து வைப்பதற்கு அரசியல் பிரமுகர்களும் சுகாதார அமைச்சின் பிரமுகர்களும் வருகை தரவுள்ளதால் வைத்தியசாலை வளாகத்தை துப்பரவு செய்யும்படி சுகாதார அமைச்சின் செயலாளர் தனக்கு பணித்ததற்கிணங்க இரும்பு கேடர்களை விற்பனை செய்ததாக தெரிவித்தார்.
அது தனது தனிப்பட்ட முடிவல்லவெனவும் 29-05-12 அன்று பதவி நிலை உத்தியோகஸ்தர்கள் மற்றும் அலுவலக உத்தியோகஸ்தர்களுடனும் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடப்பட்டு அதில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையிலேயே இரும்பு கேடர்கள் விற்பனை செய்யப்பட்டதாக வைத்திய கலாநிதி பவானி தன்னிலை விளக்கம் ஒன்றினை அளித்துள்ளார்.
மின்பிறப்பாக்கி நீண்ட காலம் பாவனையில் இல்லாமல் இருந்ததால் அதன் இயங்கு திறனை சோதிக்கவே வைத்தியசாலைக்கு வெளியே எடுத்துச் சென்றதாக குறிப்பிட்ட வைத்திய கலாநிதி பவானி இது தொடர்பில் விசாரனை செய்த பொலிசார் மின்பிறப்பாக்கி வெளியே எடுத்துச் சென்றமை தொடர்பில் எவ்வித முறைகேடுகளும் நடைபெறவில்லையென உறுதி செய்து தனக்கு அறிக்கை சமர்பித்துள்ளதாக வைத்திய கலாநிதி பவானி தெரிவித்தார்.
இரும்பு கேடர்கள் விற்பனை செய்தமை மின்பிறப்பாக்கி வெளியே எடுத்துச் சென்றமை மற்றும் யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் யாழ் போதான வைத்தியசாலை பணிப்பாளருடன் எவ்வித கலந்துரையாடலையும் செய்யாமலும் பணிப்பாளரின் மேலதிகாரிகளுக்கும் முறையிடாமல் பொலிசில் முறைப்பாடு செய்ததுடன் ஊடகங்களுக்கும் அறிவித்தமை இவை அனைத்தும் இடியப்ப சிக்கலாகவே இருக்கின்றது;




இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றது,

0 comments:

Post a Comment