Wednesday, June 20, 2012

அஞ்சலியை பிடித்தது: விதார்த்...

எங்கேயும் எப்போதும் படத்தில் நடிகை அஞ்சலியின் நடிப்பு என்னை வெகுவாக கவர்ந்தது என்று மைனா நாயகன் விதார்த் தெரிவித்தார்.

கொலிவுட்டில் மைனா படத்தின் மூலமாக வெற்றிவாகை சூடிய விதார்த், தற்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். சிறுவயதிலேயே நடிகனாகவேண்டுமென்ற ஆசை இருந்ததாகவும் இதன் காரணமாக  சென்னை கூத்துப்பட்டறையில் 8 வருடங்கள் நடிப்பு பயிற்சி எடுத்ததாகவும் விதார்த் நமது பேட்டியில் தெரிவித்தார்துணை நடிகராக கொக்கி, லீ போன்ற படங்களில் நடித்து நாயகனாகியுள்ளேன். அந்த தருணம் தமக்கு மிகவும் மகிழ்ச்சியை தந்ததாக கூறினார்.தற்போதுள்ள நடிகைகளில் யாருடன் நடிக்க ஆசைப்படுகிறீர்கள் என்ற கேள்விக்கு, எங்கேயும் எப்போதும் படத்தில் நடித்த அஞ்சலியை எனக்கு பிடித்தது. அதாவது அவரது நடிப்பு பிடித்ததாக தெரிவித்தார் விதார்த்.

0 comments:

Post a Comment