சரிதா தங்கை விஜி நடிக்கும் படம் ஆரோகணம். லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்குகிறார். கே இசை அமைக்கிறார்.
இப்படத்தின் பாடல் கேசட்டை இயக்குனர்கள் கே.பாலசந்தர், சேது மாதவன் வெளியிட்டனர்.
பிறகு சேது மாதவன் பேசியதாவது, சில இயக்குனர்கள் திடீரென்று பட பட்ஜெட் பற்றாக்குறையால் கஷ்டப்படுகிறார்கள். எந்த சப்ஜெக்ட் இயக்கப்போகிறோம் என்பதற்கும் பட்ஜெட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது.
போட்ட பட்ஜெட்டுக்குள் எப்படி படம் இயக்குவது என்பதை பழம் பெரும் தயாரிப்பாளர் கே.ஆர்.சுந்தரத்திடம் கற்றேன். ஒரு படத்தை உருவாக்க திட்டமிடும்போதே அதற்கு பட்ஜெட்யையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
அப்போது பட்ஜெட் பிரச்னை இருக்காது. படம் செய்வது எளிதல்ல. ஆனால் நல்ல தயாரிப்பாளர்களால் நல்ல படத்தை நிச்சயம் தயாரிக்க முடியும்.
அந்த காலத்தில் எனக்கு இதுபோல் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை. ஒரு ஸ்கிரிப்ட் உருவாகினால் அதில் ஆன்மா இருக்க வேண்டும்.
அப்போதுதான் அதனால் சுவாசிக்க முடியும். இந்த இரண்டும் ஆரோகணம் படத்தில் இருக்கிறது என்று தெரிவித்தார்.
விழாவில் இயக்குனர்கள் வசந்த், பாண்டிராஜ், மிஷ்கின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 comments:
Post a Comment