Friday, June 22, 2012

வடக்கின் வசந்தம் இருளுக்குள் - யாழில் அதிரடி மின்சார வெட்டு - அரசியல் பின்புலமா? மாணவர்கள், பொதுமக்கள் விசனம்....


கடந்த வருடம் டிசம்பர் மாதம் அதாவது க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்காக மாணவர்கள் தம்மை தயார்ப்படுத்தி வந்த நிலையில் தான் அக்காலப்பகுதியிலும் அடிக்கடி தொடர் மின்வெட்டுக்கள் மிக மோசமாக அமுல்படுத்தியதாகவும், இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. உயர்தர பரீட்சை காலப்பகுதியிலும் அவ்வாறான தொடர் மின்வெட்டினை அமுல்படுத்தி வருவதாகவும் மாணவர் சமுதாயம் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ். மாணவர்கள் படிப்பினை இழக்க வேண்டும் என்பதற்காகவும், நாட்டில் கொலை, கொள்ளை, கலாச்சார சீரழிவுகள் இடம்பெறவேண்டும் என்பதற்காகவுமா இவ்வாறு மின்வெட்டுக்களை இரவு நேரங்களில் அதிகளவாக அமுல்படுத்துகின்றனர் எனவும், யாழ் அமைச்சர்கள் இதுபற்றி அக்கறை மேற்கொள்வதாக தெரியவில்லை எனவும் மக்கள் விமர்சிக்கின்றனர்.

0 comments:

Post a Comment