Saturday, June 9, 2012

புதிய அமெரிக்க உயர்ஸ்தானிகரின் கருத்தால் இலங்கை கடும் அதிர்ச்சியில்! மகிந்த - பீரிஸ் ஆராய்வு...


அதில் குறிப்பாக, யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இலங்கை அரசு இராணுவ பிரசன்னத்தைக் குறைக்கவேண்டும், வடமாகாணசபை தேர்தலை நடத்துவதற்கான திகதியை அறிவிக்க வேண்டும், யுத்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் பொறுப்புக்கூறும் கடப்பாட்டை அரசு வெளிப்படுத்த வேண்டும் போன்ற விடயங்கள் முக்கியமானவை.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான இராஜதந்திர மட்டத்திலான உறவில் பனிப்போர் மூண்டுள்ள இவ்வேளையில், புதிதாக நியமனம் பெற்று கொழும்பு வரவுள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகர், இலங்கை அரசு செய்து முடிக்க வேண்டிய நடவடிக்கைகளை முன்கூட்டியே அறிவித்துள்ளமையானது மகிந்த அரசுக்கு என்றுமில்லாத அளவுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

0 comments:

Post a Comment