Saturday, June 2, 2012

14 வயது காதலியுடன் தற்கொலை முயற்சி செய்த வாலிபர்...


திருமணம் செய்துகொள்வதற்காக 14 வயது காதலியை அழைத்து வந்த வாலிபர், காதலியின் தந்தை துரத்தியதால் ஓடும் பேருந்தில் மோதி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரள மாநிலம், பாலக்காட்டை சேர்ந்த மார்ட்டின்(22). அதே பகுதியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஆப்ரின் (14)(பெயர் மாற்றப்பட்டுள்ளது) இருவரும் காதலித்து வந்தனர்.
இந்த விடயம் ஆப்ரினின் குடும்பத்தினருக்கு தெரியவந்ததையடுத்து இருவரையும் கண்டித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மார்ட்டின், ஆப்ரினுடன் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். அங்கு அறிவுரை கூறி அவர்களை கேரளாவுக்கே திரும்ப அனுப்பி வைத்தனர்.
இவர்கள் தாராபுரம் வந்த தகவல், ஆப்ரினின் தந்தைக்கு தெரியவந்ததையடுத்து, நண்பர் ஒருவருடன் தந்தை தாராபுரம் வந்தார்.
பேருந்து நிலையத்தில் இவர் இறங்கிய போது கேரளாவுக்கு செல்வதற்காக பேருந்தில் அமர்ந்திருந்த மார்ட்டினையும், ஆப்ரினையும் பார்த்தார்.
இருவரையும் பிடிப்பதற்காக பேருந்தில் ஏறினர். காதலியுடன் மார்ட்டின் தப்பி ஓட முயன்ற போது எதிரே வந்த அரசு பேருந்து அவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த மார்ட்டின் கோவை அரசு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து ஆப்ரின் பொலிஸில் தெரிவிக்கையில், பேருந்து நிலையத்தில் எனது தந்தை எங்களை பார்த்ததும் மார்ட்டின், நம்மை பிரித்து விடுவார்கள். எனவே இருவரும் சேர்ந்து இறந்து விடலாம் எனக் கூறி என் கையை பற்றி இழுத்தபடி எதிரே வேகமாக வந்த பேருந்தில் மோத பாய்ந்தார்.
நான் அவரது கையை உதறியதால் அவர் தானே சென்று பேருந்தில் மோதிக்கொண்டார் என்றார்.
தற்போது மார்ட்டின் மீது தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் சுயநினைவின்றி தொடர் சிகிச்சையில் உள்ளார்.

0 comments:

Post a Comment