Saturday, June 2, 2012

கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிக்க அவுஸ்திரேலிய வீரர்கள் முடிவு...

ஆட்டத்திறமைக்கேற்ற சம்பளம் என்ற அவுஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் ஊதிய முறையை எதிர்த்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் இங்கிலாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டித் தொடரை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
இங்கிலாந்தில் வரும் யூன் 29 முதல் யூலை 10ம் திகதி வரை அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது.


இத்தொடரைப் புறக்கணிக்கவோ அல்லது உலகக் கிண்ண டி20 கிரிக்கெட் தொடரையோ புறக்கணிக்க அவுஸ்திரேலிய வீரர்கள் முடிவெடுத்துள்ளதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த "தி அவுஸ்திரேலியன்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் அமைப்பு ஆட்டத்திற்கேற்ப ஊதியம் என்ற முறையை கடுமையாக எதிர்த்துள்ளது.


இது குறித்து வீரர்கள் அமைப்பின் தலைவர் மார்ஷ் கூறுகையில், இன்னும் 29 நாட்கள் பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்பட வேண்டும். யூலை மாதத்திற்குள் மாற்று ஒப்பந்தம் போடப்படவில்லையெனில் புறக்கணிப்பு பற்றி தீவிர பரிசீலனை செய்வோம் என்றார்.


அவர் மேலும் கூறுகையில், வீரர்கள் அதிக பணம் எதிர்பார்க்கவில்லை என்றும் ஆனால் கிடைத்துக் கொண்டிருக்கும் ஊதியமும் இந்த ஒப்பந்தத்தால் குறைந்து போகும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்தார்.


கிரிக்கெட் அவுஸ்திரேலியா நல்ல நிதி நிலையில் உள்ளபோது ஆட்டத்திற்கேற்ப ஊதிய முறை தேவையில்லாதது என்று வீரர்கள் தரப்பு கருதுவதாக அந்த நாளிதழ் தெரிவிக்கிறது.


கிரிக்கெட் அவுஸ்திரேலியாவுக்கு வரும் ஒட்டுமொத்த வருவாயில் வீரர்கள் ஊதியமாக 26% செல்கிறது. ஆனால் புதிய ஒப்பந்தத்தின் படி அது கடுமையாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


   

0 comments:

Post a Comment