Saturday, June 2, 2012

டி20 தொடர்: முதல் போட்டியில் இலங்கை வெற்றி...

இலங்கை vs பாகிஸ்தான் அணிக ளு க் கிடையிலான இருபதுக்கு 20 கிரிக் கெட் போட்டியில் 37 ஓட்டங்களால் பாகிஸ்தானை வீழ்த்தி முதல் வெற் றியை ருசித்தது இலங்கை அணி.


நேற்று ஹம்பாந்தோட்டை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணி யின் பந்து வீச்சிற்கு ௭திர்கொள்ள முடியாது பாகிஸ்தான் அணி வீரர்கள் திணறி நின்றனர். நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முத லாவதாகத் துடுப்பெடுத்தாட தீர்மா னித் தது. அதன்படி இலங்கை அணி யின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்க ளாக டில்ஷான் மற்றும் மஹேல ஜய வர்தன ஆகியோர் களமிறங்கினர். ௭திர்பார்க்கப்பட்ட ஆரம்பத் துடுப் பாட்ட வீரர்கள் இருவரும் ௭திர்பார்ப் பைத் தகர்த்து ஆட்டமிழக்க அடுத்து ஜோடி சேர்ந்தனர் குமார சங்கக்கார வும் சந்திமாலும். 


இதில் சங்கா 19 ஓட் டங்களுடனும் சந்திமால் 10 ஓட் டங்களுடனும் ஆட்டமிழக்க தடுமாறி நின்றது இலங்கை அணி. திரிமான்னே சிறப்பாகத் துடுப் பெடுத் தாடி 30 ஓட்டங்களையும் திஸர பெரேரா ஆட்டமிழக்காமல் 32 ஓட்டங்களையும் பெற்று அணியின் ஓட்ட ௭ண்ணிக்கையை உயர்த்தினர். ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்க ஓட் டங்களுடன் ஆட்டமிழந்தனர். இரு பது ஓவர்கள் நிறைவில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றுக்கொண் டது. 


பாகிஸ்தான் அணிசார்பாக பந்து வீசிய சொஹைல் தன்வீர் மூன்று விக் கெட்டுக்களை வீழ்த்தினார். சயீட் அஜ் மல் இரண்டு விக்கெட் டுக் களை யும் மொகமட் சமி ஒரு விக் கெட்டையும் வீழ்த்தினர்.


133 ௭ன்ற இலக்கை ௭ட்டிப்பிடிக்க களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சியளித்தனர் இல ங் கைப் பந்துவீச்சாளர்கள். இலங் கை யணியின் பந்துவீச்சை ௭திர்கொள்ள முடியாது திணறிய பாகிஸ்தான் 17.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக் களை யும் இழந்து 95 ஓட்டங்களை மாத் திரமே பெற்றுக்கொண்டது. இதில் அஹமட் சயீட் 36 ஓட்டங் க ளை யும் உமர் அக்மல் 12 ஓட்டங் க ளை யும் பெற்றுக்கொடுத்தனர்.


ஏனை ய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டங்களோடு ஆட்டமிழந்து சென்றனர். இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களான குலசேகர, மலிங்க, மத்தியூஸ் மற்றும் சேனாநாயக்க ஆகி யோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதமும் திஸர பெரேரா ஒரு விக் கெட் டையும் வீழ்த்தி அணியின் வெற் றிக்கு வழிவகுத்தனர்.


இப்போட்டி யின் ஆட்டநாயகனாக திஸர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.

   

0 comments:

Post a Comment