Saturday, June 2, 2012

செஸ் விளையாட்டில் 5-வது முறையாக ஆனந்த் உலக சாம்பியன்...

 உலக செஸ் போட்டியில் இஸ்ரேல் வீரரை டைபிரேக்கரில் தோற்கடித்த இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் 5-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றார்.


உலக செஸ் போட்டி


இந்திய கிரா ட்மாஸ்டரும், நட பு சாம்பியனுமான விஸ்வநாதன் ஆனந்த்-இஸ்ரேல் கிரா ட்மாஸ்டர் போரிஸ் ஜெல்பான்ட் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷி போட்டி ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடந்தது. 12 சுற்றுகள் கொ ட இந்த போட்டி முடிவில் இரு வீரர்களும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலை வகித்தனர். இதில் 7-வது சுற்றில் ஜெல்பான்ட்டும், 8-வது சுற்றில் ஆனந்த்தும் வெற்றி பெற்றனர். மற்ற 10 சுற்றும் டிராவில் முடிந்தன.


இந்த நிலையில் வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க டைபிரேக்கர் நேற்று நடந்தது. டைபிரேக்கரில் ரேபிட்' என படும் அதிவேக வேக முறையில் விளையாட வேண்டும். இது மொத்தம் 4 ஆட்டங்கள் கொண்டது. இதில் போட்டியாளர்களுக்கு 25 நிமிடங்கள் வழங்கப்படும். மேலும் ஒவ்வொரு காய் நகர்த்தலுக்கும் 10 வினாடிகள் கூடுதலாக அளிக்கப்படும்.


மின்னல் வேகத்தில் காய்களை நகர்த்த வேண்டும் என்பதால் இருவரிடமும் டென்ஷன் தொற்றிக் கொ டது. பலத்த எதிர்பார் புக்கு இடையே டைபிரேக்கர் அரங்கேறியது. இதில் முதலாவது ஆட்டம் 33-வது நகர்த்தலுக்கு பிறகு சமநிலையானது.


இதையடுத்து 2-வது ஆட்டத்தில் ஆனந்த் வெள்ளை நிற காய்களுடன் ஆடினார். ரேபிட் முறையில் ஆடுவதில் வல்லவரான ஆனந்த் சாதுர்யமாக காய்களை நகர்த்தி, எதிராளி ஜெல்பான்ட்டுக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தார். 77-வது நகர்த்தலில் செக்' வைத்து ஆனந்த் வெற்றிக்கனியை பறித்தார். இதனால் 1.5-0.5 என்ற கணக்கில் ஆனந்த் முன்னிலை பெற்றார்.


இதன் பின்னர் 3-வது ஆட்டத்தில் கறு பு நிற காய்களுடன் விளையாடிய ஆனந்த் 59-வது நகர்தலில் டிரா செய்ய ஒ புக் கொண்டார். இதையடுத்து கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நிர்பந்தத்துடன் கடைசி ஆட்டத்தை எதிர்கொண்ட ஜெல்பான்ட்டின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. இந்த ஆட்டமும் 56-வது நகர்த்தலில் சமநிலையில் முடிந்தது. டை-பிரேக்கர் முடிவில் ஆனந்த் 2.5-1.5 என்ற புள்ளி கணக்கில் ஜெல்பான்ட்டை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார்.  


42 வயதான விஸ்வநாதன் ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர். அவருக்கு இது 5-வது உலக சாம்பியன் பட்டமாகும். ஏற்கனவே 2000, 2007, 2008, 2010-ம் ஆண்டுகளிலும் உலக சாம்பியன் மகுடத்தை சூடியிருக்கிறார். வெற்றி பெற்ற அவருக்கு சுமார் ரூ.81/2 கோடியும், தோல்வியடைந்த 43 வயதான ஜெல்பான்ட்டுக்கு ரூ.6 கோடியும் பரிசுத்தொகையாக கிடைத்தன.


செஸ் விளையாட்டில் டகாலமாக கோலோச்சி வரும் ஆனந்த் தனது 6-வது வயதில் செஸ் விளையாடத் தொடங்கினார். 14 வயதில் முதல் முறையாக வெற்றியை ருசித்தார். அது முதல் அவர் செஸ்சில் ராஜாவாக ஜொலித்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் என்ற பெருமைக்குரிய ஆனந்த் அர்ஜுனா, பத்மஸ்ரீ போன்ற உயரிய விருதுகளை வாங்கியிருக்கிறார். இனி அடுத்த உலக செஸ் போட்டி நடக்கும் 2014-ம் ஆண்டு வரை ஆனந்த் சாம்பியனாக வலம் வருவார்.


   

0 comments:

Post a Comment