யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து மின் பிறப்பாக்கி, இரும்பு கேடர்களை அனுமதியின்றி வெளியே எடுத்துச் சென்றமை தொடா்பாக வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி நடராஜா ஜெயக்குமார் தெரிவித்தார்.
மின் பிறப்பாக்கி, இரும்பு கேடர்கள் போன்றவற்றை 26-9311 என்னும் இலக்கமுடைய பார ஊர்தியில் அனுமதியின்றி வெளியே எடுத்துச் செல்லப்பட்டமை ஆவணங்களில் இருந்து உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். வைத்தியசாலை வட்டராங்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறு எடுத்துச் செல்லப்பட்ட பொருட்கள் மீளக் கொண்டுவரப்டாவிட்டால், வேலை நிறுத்தம் செய்யப் போவதாக யாழ்.அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனையடுத்து, குறித்த பொருட்கள் மீளக் கொண்டுவரப்பட்டதாக யாழ் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் கலாநிதி நடராஜா ஜெயக்குமார் சுட்டிக்காட்டினார்.
அதனைத் தொடர்ந்து அரச சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்ததாக குற்றம் சுமத்தி யாழ். அரச வைத்திய அதிகாரிகள் சங்கம், யாழ். பொலிஸ் நிலையத்தில் வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.











0 comments:
Post a Comment