Saturday, June 2, 2012

கிளிநொச்சியில் இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் பிராந்திய கற்கை நிலையம் திறந்து வைப்பு...


ஏ9 வீதியில், 155 கட்டைப் பகுதியில் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதிதலைவருமான மு.சந்திரகுமார் அவர்களினால் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் பிராந்திய கற்கை நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
யாழ். பல்கலைகழகத்தின் பொறியியல், விவசாய பீடங்கள், தொழிநுட்ப கல்லூரிகள், உயர்கல்வி நிலையங்கள் என ஆரம்பிக்கப்பட்டு கொண்டிருகின்றன. இது இந்த மாவட்டத்தின் முன்னேற்றத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. அத்தோடு இவ்வாறான உயர்கற்கை நிலையங்களில் கல்வியை மேற்கொள்வதன் மூலம் பெறக்கூடிய பயன்கள் மற்றும் வேலைவாய்ப்பு தன்மைகள் பற்றி மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினரின் என்ரிப் திட்டத்தின் கீழ், ஜம்பது இலட்சம் ரூபா நிதி ஓதுக்கீடு செய்யப்பட்டு, மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்வில், இலங்கை திறந்த பல்கலைகழத்தின் உபவேந்தர் உபாலி விதானபத்திரண, மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், இலங்கை திறந்த பல்கலைகழகத்தின் பதிவாளர் விந்தியா ஜயசேன, அதன் பணிப்பாளர் நிசாந்த, ஓய்வு பெற்ற அரச அதிபர் துறைராஜா, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அமைப்பாளர் தவநாதன் மற்றும் விரிவுரையாளர்கள் பணியாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


0 comments:

Post a Comment